முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 12, 2011

இலங்கையில் சுற்றுலா: இந்தியர்கள் அதிக ஆர்வம்

கொழும்பு, ஜன.11:   இலங்கையின் சுற்றுலா தொழில் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. சுற்றுலா பயணிகளில் இந்தியர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

   சுற்றுலா பயணிகளின் சொர்க்கத்தீவு என்று ஒரு காலத்தில் இலங்கை அறியப்பட்டது.  அந்நாட்டு வருமானத்தின் பெரும் பங்கை சுற்றுலா துறையே வழங்கி வந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழர் பிரச்னையால் இருந்துவந்த சூழ்நிலை இந்தத் துறையை தொய்வு அடையச் செய்திருந்தது. 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வந்தபின், மீண்டும் இத்தீவுதேசத்துக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

   அதிலும் குறிப்பாக, சுற்றுலா வர்த்தகத்திலிருந்து இலங்கைக்கு கிட்டும் வருமானத்தின் பெரும்பகுதி இந்தியப் பயணிகளிடமிருந்தே வருகிறது. 2010-ம் ஆண்டு இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6,54,476. இதில், 1,26,882 பேர் இந்தியர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களே அதிகம் இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். இங்கிலாந்து சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 1,05,496.

   2009-ம் ஆண்டு இலங்கை வந்த பயணிகள் எண்ணிக்கை, 4,47,890 ஆக இருந்தது. இதில் 83,634 பேர் இந்தியர்கள்; 81,594 பேர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.  2009-ம் ஆண்டைவிட 2010-ம் ஆண்டு 46.1 சதவீதம் அதிக பயணிகள்  இலங்கை வந்துள்ளனர்.

   சுற்றுலா பயணிகள் வரவு அதிகரித்துள்ளதற்குக் காரணம் இலங்கையின் அமைதி நிலைமையே என்கிறார்கள் அந்நாட்டு அதிகாரிகள். சுற்றுலா துறையின் தேவைகள் அதிகரித்துள்ளதால் அறை வாடகை, உணவு விடுதிகளில் விலை முதலியவையும் அதிகரித்துள்ளன.

Nanri : Posted by Thinamani News

No comments:

Visitors