முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 12, 2011

சென்னையை முடக்கும் கடும் குளிர்

சென்னை, ஜன. 11: சென்னையில் தொடர்ந்து கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. நகரில் கடந்த 2 நாள்களாக பகலில் வெயில் அடித்தபோதும், குறைந்தபட்ச வெப்பநிலை 66 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாகக் குறைந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை படிப்படியாகக் குறைந்து கடந்த டிசம்பர் மாதக் கடைசியில், நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 73 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாகக் குறைந்தது. பொதுவாக ஆண்டுதோறும் சென்னையில் புத்தாண்டு முதல் குளிர்காலம் தொடங்கும்.

இதைத் தொடர்ந்து, நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 68 டிகிரி வரை குறையத் தொடங்கியது.

வானிலை ஆய்வு மையத்தின் கடந்த 25 ஆண்டு பதிவேட்டு விவரங்களுடன் ஒப்பிடுகையில், குளிர்காலத்தில் நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 62 முதல் 66 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயர்ந்துள்ளது.

 கடந்த 1982-ம் ஆண்டு ஜனவரி 27-ல் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 61 டிகிரியாக இருந்தது. இதுவே, கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச பகல்நேர வெப்பநிலை ஆகும்.

இதேபோல இந்த ஆண்டும் இப்போது நகரில் மாலை 3 மணிக்குப் பின்னர் குளிர் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. அதிகாலையில், பல்வேறு இடங்களில் பனிமூட்டமும் காணப்படுகிறது.

நகரில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக இருந்தது. இந்த நிலையில், நகரில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 66 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக, சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் பிற்பகல் 3 மணிக்குப் பின்னரே கடற்காற்று வீசத் தொடங்கும். ஆனால், இப்போது பகல் 1 மணிக்கு வெயிலுடன் கூடிய காலநிலை நீடித்தபோதும் குளிருடன் கூடியதாக கடற்காற்று வீசுகிறது. இதனால், நகரவாசிகள் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

No comments:

Visitors