புதுடெல்லி: வடமேற்கு டெல்லி ரானிபாக் பகுதியைச் சேர்ந்த ஷாகில் கத்ரி, மணிஷ் யாதவ் என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். சேர்ந்து தொழில் செய்தபோது வாங்கிய நிலத்தை விற்பதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று ஷாகில் கத்ரி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மணிஷ்யாதவ் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார்.
அப்போது அந்த வழியாக வந்த குல்பூஷன் என்பவர், ரத்த வெள்ளத்தில் கிடந்த கத்ரியை பார்த்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷாகில் கத்ரி தன்னை சுட்டது தனது தொழில் விரோதி மணிஷ்யாதவ் என்ற விவரத்தை குல்பூஷனிடம் தெரிவித்தார்.
குல்பூஷன் சமயோசிதமாக அதனை தனது செல்போனில் பதிவு செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் செல்போனை ஒப்படைத்தார். போலீசார் கத்ரியை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கத்ரி இறந்தார். செல்போனில் பதிவான வாக்குமூலம் அடிப்படையில் மணிஷ்யாதவை போலீஸ் தேடி வருகின்றனர். சாமர்த்தியமாக செயல்பட்ட குல்பூஷனை போலீசார் பாராட்டினர்.

No comments:
Post a Comment