முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 11, 2011

ஏர்இந்தியா விமானம் எலியால் ரத்து

துபாய்: விமானம் புறப்படும் நேரத்தில் கேபினுக்குள் எலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், துபாயிலிருந்து டெல்லி வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. துபாயிலிருந்து டெல்லிக்கு 120 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் ஏறிய பின்னர், விமானத்துக்குள் எலி ஒன்று சுற்றித் திரிவதை விமான ஊழியர் பார்த்தார். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், விமானம் புறப்பட அனுமதி கிடைக்கவில்லை.

விமானத்துக்குள் எலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. மின் வயர்களை எலி கடித்து சேதப்படுத்தியுள்ளதா என்பதை டெக்னீசியன்கள் சோதிக்க வேண்டும். எலியை உயிருடன் பிடிக்க முடியவில்லை என்றால், விமானத்துக்குள் மயக்க மருந்து புகை செலுத்தி எலியை பிடிக்க வேண்டும்.

இதனால் ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு மறுநாள் டெல்லி அனுப்பப்பட்டனர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ரியாத் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Visitors