மும்பை : துபாய் கம்பெனி பரிசாக கொடுத்த ஸி18 கோடி மதிப்புள்ள அதிநவீன வசதி கொண்ட பங்களாவுக்கு (வில்லா) உடனடியாக வரி செலுத்துமாறு பாலிவுட் பிரபல நடிகர் ஷாரூக் கானுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. துபாயைச் சேர்ந்த நிறுவனம், நகீல் பப்ளிக் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி. அதன் ஆண்டு நிதி நிலைக் கூட்டத்தில் பாலிவுட் நடிகர் ஷாரூக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரை கவுரவிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய வில்லாவை ஷாரூக் கானுக்கு அந்நிறுவனம் பரிசாக அளித்தது. அதன் மதிப்பு ரூ.17.84 கோடி.
துபாயில் வில்லாவை பரிசாகப் பெற்றதை வருமான வரி துறைக்கு தாக்கல் செய்யும் வருமான கணக்கு விவரத்தில் ஷாரூக் கான் தெரிவிக்கவில்லை. இதை கண்டுபிடித்த வருமான வரித் துறை கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஷாரூக் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. துபாயில் பரிசாக கிடைத்த ரூ.17.84 கோடி மதிப்புள்ள வில்லாவுக்கு உடனடியாக வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதற்கு பதில் அளித்த ஷாரூக், ‘துபாயில் பங்களாவை வர்த்தகம் மூலமோ, தொழில் மூலமோ சம்பாதிக்கவில்லை. அது பரிசாக கிடைத்தது. எனவே, வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அதில் திருப்தி அடையாத வருமான வரித் துறை டிசம்பர் மாதம் மீண்டும் ஷாரூக் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ‘நகீல் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு முதல் ஷாரூக் கானின் பெயரை தங்கள் நிறுவன தயாரிப்பை விளம்பரப்படுத்த பயன்படுத்தி வருகிறது.
அதற்கு பணம் பெற்றதாக இதுவரை ஷாருக் எந்த ரசீதும் வருமான கணக்கில் காட்டவில்லை. இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட பங்களா வருமானமாகவே கருதப்படும். எனவே ரூ.17.84 கோடிக்கான வரியை செலுத்த வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Nanri : Posted by Thinamalar

No comments:
Post a Comment