இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பஞ்சாப் மற்றும் மும்பை வியாபாரிகள் பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்தனர். இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் திடீர் தடை விதித்துள்ளது. ஆனால் தடைக்கு முன்னரே இந்திய வியாபாரிகள் பலர் பாகிஸ்தான் வியாபாரிகள் மூலம் ஏராளமான அளவு வெங்காயத்தை வாங்கி வந்து விட்டனர். அவற்றை லாரிகளில் ஏற்றி வாகா எல்லை மூலமாக பஞ்சாப் கொண்டு வர அனுப்பி வைத்தனர்.
லாரிகள் புறப்பட்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் திடீர் தடை விதிக்கப்பட்டதால் வாகா எல்லையில் அனைத்து வெங்காயம் லாரிகளும் நிறுத்தப்பட்டன. 300 வெங்காய லாரிகள் இப்போது இந்தியா வர முடியாமல் அங்கேயே நிற்கின்றன. லாரிகளில் உள்ள வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment