Dec 24, 2010
வெங்காயம் வாங்க வங்கியில் கடன் கேட்ட முதல்வரின் மனைவி!
போபால்: கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த வெங்காயத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்ற நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானின் மனைவி சாத்னா சிங் வெங்காயம் வாங்க வங்கியில் கடன் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து மத்தியபிரதேசத்தில் பா.ஜ.க., சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சாத்னா சிங்கும் கலந்து கொண்டார். அப்பொழுது ஒரு வங்கிக்குள் சென்ற சாத்னா சிங் விண்ணப்ப படிவத்தை வாங்கி பூர்த்தி செய்தார். விண்ணப்பத்தில் வெங்காயத்தின் விலை எதிர்பார்க்காத விதத்தில் அதிகரித்திருப்பதால் தனக்கு வெங்காயம் வாங்க கடன் வேண்டும் என கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment