முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 8, 2010

பெங்களூரில் யூசுப் பதான் சூறாவளி இந்தியா வெற்றி

பெங்களூர்: நியூசிலாந்து அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், யூசுப் பதானின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், சம்பிரதாயமான 4வது போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது. நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 315 ரன் எடுத்தது. அதிரடியாக விளை யாடிய பிராங்க்ளின் 98 ரன், நாதன் மெக்கல்லம் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா 36 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன் எடுத்த நிலையில், மழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கம்பீர் 27, கோஹ்லி 0, யுவராஜ் 20, பார்திவ் 53, ரோகித் 44 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பதான் 48, திவாரி 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர். மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அதிரடி ஆட்டம் ஆடிய யூசுப் பதான், ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார்.
பதானை ஆட்டமிழக்க செய்ய முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். கடைசி வரை திவாரி கம்பெனி கொடுக்க அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் பதான். 48.5வது ஓவரில் திவாரி இமாலய சிக்சர் அடிக்க, இந்தியா 321 ரன் எடுத்தது. தோல்வி அடையும் நிலையில் இருந்த இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 96 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தார் பதான். திவாரி 37 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் தொடரில் 4&0 என்ற கணக்கில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடைசி போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடக்கிறது.

Newzealand in India (Nov 04 - Dec 10, 2010)
India vs New Zealand - 4th ODI
07-12-2010
Ind : 321 for 5 in 48.5 overs
Y Pathan123 (96)
S Tiwary37 (39)
Bowler O M R W
T Southee100641
K Mills100650
Ind won by 5 wkts

No comments:

Visitors