முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 8, 2010

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா பயணம் 9 வீரர்கள் சென்றனர்.

மும்பை, டிச. 8-
 
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் ஆட்டம் ஆகியவற்றில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. பயிற்சியாளர் கிர்டஸ்டலுடன், புஜாரா, ஜெய்தேவ், உன்கட், உமேஷ் யாதவ் ஆகியோர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா சென்றனர்.
 
கேப்டன் டோனி, தெண்டுல்கர், ஷேவாக், ஹர்பஜன் சிங், ஒஜா, ஸ்ரீசாந்த், சகா, ரெய்னா, இஷாந்த் சர்மா ஆகிய 9 வீரர்கள் இன்று அதிகாலை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டனர். துபாய் வழியாக அவர்கள் கேப்டவுன் சென்றடைவார்கள். டிராவிட்டும், லட்சுமனும் நேற்று புறப்பட்டு சென்றனர்.
 
எஞ்சிய வீரர்களான ஜாகீர்கான், காம்பீர், முரளி விஜய் ஆகியோர் 11-ந் தேதி புறப்பட்டு செல்வார்கள். இந்த 3 பேரும் நியூசிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெறும் கடைசி போட்டிக்கு பிறகு புறப்படுவார்கள்.

No comments:

Visitors