மும்பை: மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் பாகிஸ்தானின் லஷ்கர்&இ&தய்பா தீவிரவாதிகள் 4 பேர் வங்கதேசம் வழியாக ஊடுருவி உள்ளனர். இவர்களில் வாலித் ஜின்னா என்ற தீவிரவாதியின் வரைபடத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவு துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனால் நகரின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கார் பார்க்கிங் இடங்களை வெடிகுண்டு நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர். புறநகர் ரயில் நிலையம், பஸ் நிலையங்கள், ஓட்டல்கள், லாட்ஜ்களிலும் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது.
இதற்கிடையில் மஹ்பூஸ் ஆலம் என்ற தீவிரவாதி தப்பி செல்ல முயற்சிக்கும் தகவல் போலீசுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் மும்பை விமான நிலையத்தை உஷார் படுத்தினர். சந்தேகத்துக்கு இடமான நபர்களை பார்த்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க 022 - 2263 3333 என்ற புதிய ஹெல்ப்லைன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment