முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 17, 2010

இந்தியா-சீனா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுதில்லி, டிச.16: பசுமைத் தொழில்நுட்ப ஒப்பந்தம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவும், சீனாவும் இன்று கையெழுத்திட்டன.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன பிரதமர் வென் ஜியாபோ இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடப்பட்டன.
பசுமைத் தொழில்நுட்ப ஒப்பந்தம் தவிர, பொதுவான ஆறுகள் குறித்த தகவல் பரிமாற்றம், ஊடகப் பரிமாற்றம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றில் தலா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2 ஒப்பந்தங்கள் வங்கி தொடர்பானவை. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையம் இடையே ஒரு ஒப்பந்தமும், இந்திய எக்ஸிம் வங்கி(ஏற்றுமதி- இறக்குமதி வங்கி) மற்றும் சீன மேம்பாட்டு வங்கி இடையே ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகின.

No comments:

Visitors