காத்மாண்டு, டிச.16: நேபாளத்தில் காணாமல் போன விமானம் காத்மாண்டு அருகே மலைப்பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தின் பாகங்களை மீட்புக் குழுவினர் இன்று காலை கண்டுபிடித்தனர். அந்த விமானம் நேற்று கிழக்கு நேபாளத்தின் கோடங் மாவட்ட விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.அடர்ந்த காட்டின் நடுவே விழுந்துகிடந்த அந்த விமானம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற 2 பேரின் உடல்களைத் தேடி மீட்புக் குழுவினர் தேடிவருவதாக போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment