முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 17, 2010

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா திணறல் (139/9)


சேவாக்கை வீழ்த்திய ஸ்டெயினைப் பாராட்டும் சக வீரர்கள்.
செஞ்சுரியன், டிச.16: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. புதன்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மைதானம் ஈரப்பதத்துடன் இருந்தது. இதையடுத்து ஆட்டம் 4 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.  இந்திய அணியில் காயம் காரணமாக ஜாகீர்கான் சேர்க்கப்படவில்லை.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். சேவாக்கும், கம்பீரும் முதல் இன்னிங்ûஸத் தொடங்கினர்.
மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் சேவாக் அடித்த பந்து 3-வது சிலிப்பில் நின்ற ஆம்லாவிடம் தஞ்சம் புகுந்தது. சேவாக் ரன் கணக்கைத் துவக்கமாலேயே ஆட்டமிழந்தார்.
பின்னர் கம்பீருடன் திராவிட் ஜோடி சேர்ந்தார். தென்னாப்பிரிக்க வீரர்கள் மோர்னே மோர்கல், ஸ்டெயின், சோட்சோபி, காலிஸ் ஆகியோர் பவுன்சர்களை வீசி இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தனர்.
அணியின் ஸ்கோர் 24 ரன்களை எட்டியபோது கம்பீர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளில் இந்த ரன்னை எடுத்தார். அவரைத் தொடர்ந்து திராவிட் 14 ரன்களில் மோர்கல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் சச்சினும், லட்சுமணும் ஜோடி சேர்ந்தனர். சச்சின் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
அணியின் ஸ்கோர் 66 ரன்களை எட்டியபோது லட்சுமண் 7 ரன்களில் ஸ்டெயின் பந்தில் கிளீன் போல்டு ஆனார். பின்னர் வந்த ரெய்னா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதையடுத்து சச்சினுடன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய சச்சின் 34 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்திருந்தபோது ஸ்டெயின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 8 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.  பின்னர் ஹர்பஜன் சிங் களமிறங்கினார். தோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஹர்பஜன் அதிரடியில் ஈடுபட்டார். 32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஹர்பஜன் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களுடனும், தோனி 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.




ஸ்கோர் போர்டு
இந்தியா
கம்பீர் (சி) ஹாரிஸ் (பி) மோர்கல் 5
சேவாக் (சி)  ஆம்லா ( பி) ஸ்டெயின் 0
திராவிட் எல்பிடபிள்யூ மோர்கல் 14
டெண்டுல்கர் எல்பிடபிள்யூ ஸ்டெயின் 36
லட்சுமண் (பி) ஸ்டெயின் 7
ரெய்னா (சி) பிரின்ஸ் (பி) காலிஸ் 1
தோனி அவுட் இல்லை 5
ஹர்பஜன் சிங் அவுட் இல்லை 27
உபரி 10
மொத்தம்( 32 ஓவர்கள்,  6 விக்கெட்) 105

விக்கெட் வீழ்ச்சி
1-1 (சேவாக்), 2-24 (கம்பீர்), 3-27 (திராவிட்), 4-66 (லட்சுமண்), 5-67 (ரெய்னா), 6-71 (டெண்டுல்கர்).

பௌலிங்
ஸ்டெயின்             10-1-34-3
மோர்கல்               9-4-9-2
சோட்சோபி           7-2-31-0
காலிஸ்                 5-1-19-1

No comments:

Visitors