முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 30, 2010

பாபர் மசூதி இடிப்புக்கு நரசிம்மராவ் காரணம்; எமர்ஜென்சி கால தவறுகளுக்கு சஞ்சய்காந்தியே காரணம்; காங்கிரஸ் புத்தகத்தில் தகவல்

புதுடெல்லி, டிச. 29-
 
காங்கிரஸ் கட்சி 125 ஆண்டுகள் ஆவதை யொட்டி காங்கிரஸ் வரலாறு புத்த கம் வெளியிடப்பட்டு உள்ளது.
 
மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியை ஆசிரியராக கொண்டு இந்த புத்தகத்தை தயாரித்து உள்ளனர்.
 
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இப்போதைய கால கட்டம் வரை நடந்த பல்வேறு சம் பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  
 
அதில் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் 1975-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட “எமர்ஜென்சி” பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
தவிர்க்க முடியாத சூழலில் அன்று இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். ஆனால் அதை நடைமுறைபடுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்று புத்தகத்தில் கூறியுள்ளனர்.
 
எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு அதை நடை முறைக்கு கொண்டு வந்த போது தொடக்கத்தில் மக்கள் அதை வரவேற்றார்கள். ஆனால் கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன், குடிசைகளை கட்டாயமாக காலி செய்ய வைத்தது போன்றவை மக்கள் மத்தி யில் கோபத்தை ஏற் படுத்தி விட்டது. இந்த திட்டங்களை தீவிரமாக அமல்படுத்த சஞ்சய்காந்தி காரணமாக இருந்தார். இது எதிர் மறைவான விளைவு களை ஏற்படுத்தி விட்டது என்று அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
 
எமர்ஜென்சி காலத்தில் ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்களை கைது செய் தது தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  
 
அதே நேரத்தில் இந்த புத்தகத்தில் ராஜீவ்காந்தியை வெகுவாக பாராட்டி உள் ளனர். அவர் கட்சி பதவிக்கு வந்ததும் கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். கட்சியில் மறுமலர்ச்சியை உருவாக் கினார். கட்சி தேர்தலை நடத்தி புது ரத்தத்தை பாய்ச்சினார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
நேரு குடும்பத்தை சேராத நரசிம்மராவ் 5 வருடம் காங்கிரஸ் அரசை திறம் பட நடத்தியதாக குறிப்பிடப் பட்டு உள்ளது. அவர் கொண்டு வந்த பொருளா தார திட்டங்களையும் பாராட்டி உள்ளனர்.  
 
ஆனால் அயோத்தி பிரச்சினையில் நரசிம்மராவ் கணிப்பு தவறி விட்டது. பாபர் மசூதி இடிப்பை அவர் தடுப்பதில் தோல்வி அடைந்து விட்டார் என்றும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Visitors