முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 30, 2010

பள்ளிக்கு வந்த மாணவிக்கு திடீரென குழந்தை பிறந்தது

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் மல்லிகா (17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு வந்த மல்லிகா, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதால், ஆசிரியர்கள் அவரை ஆட்டோ ஒன்றில் வகுப்பு தோழிகள் இருவருடன் வீட்டுக்கு அனுப்பினர். ஆனால், வீட்டிற்கு செல்லாமல், மல்லிகா உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குள் சென்று சத்தம்போட்டு கதறினார். இதனால், மருத்துவமனை பணியாளர்கள் பதட்டமடைந்து கதவை திறந்து பார்த்த போது, மல்லிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.தாயையும், குழந்தையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Visitors