முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 27, 2010

ராக்கெட் வெடித்தது ஏன்? நிபுணர்கள் குழு ஆய்வு

பெங்களூர்: ஜி.எஸ்.எல்.வி எப்06 ராக்கெட் வெடித்து சிதறியது ஏன் என்பது பற்றி ஆராய இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிசாட்5பி தொலைதொடர்பு செயற்கைகோளுடன் நேற்றுமுன்தினம் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்06 ராக்கெட் வானில் வெடித்து சிதறியது. இது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன(இஸ்ரோ) விஞ்ஞானிகளை அதிர்ச்சி யடையச் செய்துள்ளது.

இது பற்றி இஸ்ரோ நிறுவன செய்தி தொடர்பாளர் சதீஷ் பெங்களூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வெடித்து சிதறுவதற்கு முன் ராக்கெட் அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்யும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கிவிட்டனர். அதே நேரத்தில் ராக்கெட் வெடித்து சிதறியது ஏன் என்பது பற்றி முழுமையாக ஆராய நிபுணர்கள் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழு இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அமைக்கப்படும். ஆய்வு முடிந்ததும் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

No comments:

Visitors