பயானா: இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குஜ்ஜார்களுடன் ராஜஸ்தான் மாநில அரசு நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. ராஜஸ்தானில் அரசு வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் கடந்த ஒரு வாராமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குஜ்ஜார்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் குஜ்ஜார்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான தகுதிகள் எதையும் மாநில அரசு தாக்கல் செய்யவில்லை என்று கூறி இடஒதுக்கீட்டை நிராகரித்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இதனால், குஜ்ஜார்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக குஜ்ஜார் இன தலைவர் கிரோரி சிங் பைன்சலாவுடன் மாநில அரசு நேற்று பேச்சு நடத்தியது. அரசின் சார்பில் கலந்து கொண்ட எரிசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘குஜ்ஜார்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக முடிவு செய்ய கமிட்டி அமைக்கலாம் என்றும் அதில் பைன்சலாவும் உறுப்பினராக இருக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.
எனினும், இதை ஏற்க பைன்சலா மறுத்து விட்டார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இடஒதுக்கீடு அளிப்பதைத் தவிர எதையும் ஏற்க மாட்டோம் என்றும் மறியல் போராட்டம் தீவிரமடையும் என்றும் பைன்சலா எச்சரித்துள்ளார். போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

No comments:
Post a Comment