முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 16, 2010

போலியைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: அரசு பரிசீலனை

ராஞ்சி, டிச.14: கள்ள நோட்டுகளைத் தடுக்கும்பொருட்டு பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சுப்பாராவ் தெரிவித்தார்.


போலி ரூபாய் நோட்டுகளை தடுக்கவும், நீண்டகாலம் நீடித்திருக்கவும் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என ராஞ்சி பல்கலைக்கழக மாணவர்களிடம் சுப்பாராவ் தெரிவித்தார்.


பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்திவரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளிடம் இதுகுறித்த அனுபவங்களை கேட்க உள்ளதாக சுப்பாராவ் கூறினார்.

No comments:

Visitors