முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 16, 2010

தேசிய சீனியர் வாலிபால்: தமிழக ஆடவர் வெற்றி

சென்னை, டிச.14: சென்னையில் நடைபெற்று வரும் வேலம்மாள் 59-வது தேசிய சீனியர் வாலிபால் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழக ஆடவர் அணி  சர்வீசஸ் அணியை வென்றது.
தமிழக அணி 25-16, 25-17, 25-17 என்ற கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தியது. இதேபோல் கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.
மகளிர் பிரிவில் தமிழகம் தோல்வி: மகளிர் பிரிவில் ரயில்வே அணியிடம் 25-12, 25-20, 25-17 என்ற கணக்கில் தமிழக மகளிர் அணி தோல்வியடைந்தது.
ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தரகண்ட், குஜராத், மத்திய பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன

No comments:

Visitors