முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 21, 2010

வங்காளதேச விமான நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பு

டாக்கா, டிச 20-
 
வங்காள தேச தலைநகர் டாக்காவில் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு எப்போதும் பயணிகள் கூடி இருப்பார்கள். அவர்களின் பொழுது போக்கிற்காக அங்குள்ள மெகா திரையில் வங்காள தேசத்தின் சுற்றுலா இடங்கள் நாட்டு கலாசார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
 
நேற்று அங்கு நூற்றுக்கணக்கான பயணிகளும், பொதுமக்களும் காத்திருந்தனர். அப்போது அந்த மெகா திரையில் காம உணர்வை தூண்டக்கூடிய ஆபாச படம் ஒளிபரப்பப்பட்டது.
 
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எழுப்பட்ட புகாரை தொடர்ந்து அந்த படம் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
ஆபாச படத்தை ஒளிபரப்பிய ஆபரேட்டரை கைது செய்தனர். அவருக்கு 2 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், விமான நிலையத்தில் கேபிள் ஒளிபரப்பு உரிமையை பெற்ற டி.வி. குத்தகை தாரருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Visitors