முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 21, 2010

மும்பை போன்ற தாக்குதல்: தீவிரவாதிகள் சதி திட்டம்

லண்டன்: கிறிஸ்துமஸ் நாளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் நாடுகளில் மும்பை போன்ற பயங்கர  தாக்குதல் நடத்த அல் கய்தா தீவிரவாத தலைவர் இயாஸ் காஷ்மீரி பிரிட்டனைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருவதாக பிரிட்டன் பத்திரிகை எச்சரித்துள்ளது.

அல் கய்தா தீவிரவாத அமைப்புக்கு கொரில்லா தந்திரங்களை பயற்சி அளித்து வருபவன் இயாஸ் காஷ்மீரி. இவன் இந்த இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறான். இவனை லண்டனில் இருந்து வெளியாகும் தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கை புதிய ஒசாமா பின் லேடன் என்று குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அல் கய்தா தீவிரவாதிகளுக்கு கொரில்லா தந்திரங்களை வழங்கி வருகிறான். இவன் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பான் என்று அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் அப்பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: கிறிஸ்துமஸ் நாளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் நாடுகளில் மும்பை போன்ற தாக்குதல் நடத்த இயாஸ் திட்டமிட்டுள்ளான். இதற்கு பிரிட்டனைச் சேர்ந்த சில இளைஞர்களை பணிக்கு அமர்த்தி பயிற்சி அளிக்கிறான்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உருவான ஹர்கத் உல் ஜிகாத் இல் இஸ்லாமி தீவிரவாத அமைப்பில் இருந்த இயாஸ், ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்துடன் போரிட்டான். பின்னர் வசிரிஸ்தான் சென்ற இயாஸ் உலக தீவிரவாத இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டான். 46 வயதான இயாஸ் கொரில்லா தாக்குதலில் திறமையானவன். இவ்வாறு தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ்  நாளில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளின் சதி குறித்து இன்டர்போலும் எச்சரித்துள்ளது.

No comments:

Visitors