முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 28, 2010

ராணி முகர்ஜியும் வித்யா பாலனும் உதட்டோடு உதடு வைத்து முத்தம்.

ராணி முகர்ஜியும் வித்யா பாலனும் உதட்டோடு உதடு வைத்து கொடுத்து முத்தம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திரைக்கு வர உள்ள நோ ஒன் கில்ட் ஜெசிகா படத்தில் நடிக்கும்போது, நடிகை ராணி முகர்ஜிக்கும் வித்யா பாலனுக்கும் பிரச்னை என சமீபத்தில் வெளியான தகவல் பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்காக இருவரும் சந்தித்தனர். அருகருகே அமர்ந்து மனம் விட்டு பேசினர்.

நாம் அடிக்கடி மோதிக் கொள்வதாக கிசுகிசு வருகிறது தெரியுமா? என முகர்ஜி பேச்சை தொடங்கினார்.

ஆமாம். அதைப் பார்த்து அப்செட் ஆகியிருக்கிறேன்.

என்னைப் பற்றி நீ விமர்சித்ததாக சிலர் கூறினர். அதனால் அன்று முழுக்க மூட் அவுட் ஆகிவிட்டேன். பின் உன்னுடன் நான் போனில் பேசினேன். அப்போதுதான் எல்லாமே பொய் என தெரிந்தது. உண்மையிலேயே நமக்குள் மோதல் இல்லை.

இதை எப்படி வெளிப்படுத்துவது?' என வித்யா பாலன் கேட்டார். 'அதை வெளிப்படுத்த ஒரு சூப்பர் ஐடியா இருக்கிறது' என்றபடி வித்யா பாலனை இழுத்து, அவரது உதட்டோடு உதட்டை பதித்து முத்தம் கொடுத்தார் ராணி.

சில நொடிகள் நீடித்த இந்த காட்சி, அங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. 'நமக்குள் பிரச்னை இல்லை என்பதை இதைவிட தெளிவாக விளக்க முடியாது' என கூறியிருக்கிறார் வித்யா.

டிவி சேனலில் இந்த காட்சி ஒளிபரப்பானதால் பாலிவுட்டில் சர்ச்சை கிளம்பியுள்ளது. படத்துக்கான விளம்பர டெக்னிக் இது என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

No comments:

Visitors