முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 29, 2010

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: போர் விமானங்களை கோவையில் நிறுத்த முடிவு

புதுடெல்லி: ‘‘கோவையில் உள்ள விமானப்படை தளத்தில் இலகு ரக போர் விமானங்கள் கொண்ட 2 பிரிவுகள் அமைக்கப்படும்’’ என்று விமானப்படை துணை தலைமை தளபதி பார்போரா கூறினார்.

விமானப்படை துணை தலைமை தளபதி பி.கே.பார்போரா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென் இந்தியாவுக்கு லஷ்கர்&இ&தய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களால் அச்சுறுத்தல் உள்ளது. அவர்கள் கடல் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது.

மேலும், கடற்கொள்ளையரிடம் இருந்து இந்திய கடல் பகுதியை காக்க வேண்டி உள்ளது. இதனால், தென் இந்தியாவில் போர் விமானங்கள் கொண்ட படைப் பிரிவுகளை (ஸ்குவாட்ரான்) அமைக்க முடிவு செய்துள்ளோம். இது தவிர, அந்தமானிலும் போர் விமானங்கள் நிறுத்தப்படும்.

இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானங்கள் கொண்ட 2 பிரிவுகள் தென் இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது. இவை, கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் இயங்கும். இது தவிர சுகாய்-30 ரக போர் விமானங்கள் கொண்ட படை பிரிவுகளும் தென் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு பார்போரா கூறினார்.

No comments:

Visitors