முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 15, 2010

முத்துபேட்டை யாகூப் அலி கவிதைகள் (யோசிப்பாயாக….)

யோசிப்பாயாக….
 
எதனை  சாதிக்க
இங்கு  வந்தாய்  ,
 
என்ன சாதித்து
எதை பெற்றாய்.
 
எப்படியும்  வாழ 
எல்லாராலும்  முடிந்ததா  …
 
எத்தனையோ  இழப்புகள் 
எவரால்  தடுக்க முடிந்தது..
 
எந்த ஆசை நிறை வேறி
இந்த ஆட்டம்,
 
இந்த உயிர்  கூட 
இவனுக்கு  ….
 
இன்னும்  கண்ணுக்கு 
தெரியாமல்  …..
 
இவனோ..
 
ஆகாயத்தில்   ஆதாயம் 
தேடுகிறான்…
 
அங்கேயும்  ஒலிக்கிறது 
இறைவனின்  அழைப்பு…
 
ஆதலால்  அவன்  கையில்
அருள்மறை  …எனும்
அழகிய  வேதம்.
 
அதனை  முழுதாய் 
கற்றவன்  சொல்கிறான்….
 
இது உண்மையில்
மறுக்க  ..மறைக்க
முடியாத   இறை வேதம்,
 
அன்பார்ந்த  ..
சமூக  செல்வங்களே …
 
நாமெல்லாம்  சோதனைக்காக 
படைக்க பெற்றோம்  .
 
சாதனைகள்  படைத்து
சரித்திரம்  படைக்க…
சங்கை மிகு 
குர் ஆணை  படிப்போமாக  ….
 
இங்கு  இது வரை 
எப்படி  இருந்தோமோ ..
 
இனியாவது  …
 
யோசிப்போம்  .இறை
வேதமது  …
 
இறுதி  நாளுக்கும் 
சாட்சியாய்  போகும்.
 
ஆஹவே..
அனைவரும்  ..ஆயத்தம்
ஆவோம்,
 
இன்சா அல்லாஹ்.
 
இவன்.முத்துபேட்டை.
யாகூப் அலி (குவைத்)

No comments:

Visitors