பிரசிடெண்ட் அபுபக்கர் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக நியமனம்
சென்னை : தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவரும், அகில இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவரும், சென்னை பிரசிடெண்ட் ஹோட்டல் நிர்வாக இயக்குநருமான அல்ஹாஜ் ஏ. அபூபக்கர் அவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக 06.12.2010 திங்கட்கிழமை முதல் மூன்று ஆண்டுகளுக்கு தமிழக கவர்னரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஹஜ் கமிட்டியில் சிறப்புறப் பணிபுரிந்து வரும் பிரசிடெண்ட் அபுபக்கர் செனட் உறுப்பினர் பதவியும் சிறப்புடன் பரிணமிக்க ஈமான் டைம்ஸ் வாழ்த்துக்கிறது.

No comments:
Post a Comment