g-mail -லின் Attachment ICON -களை மாற்ற ...
பொதுவாக, E -Mail -களில் ஏதேனும் Attachment இருந்தால்- அதை
குறிக்கும் விதமாக - CLIP
வடிவ ICON ஒன்று காணப்படும். அதாவது, இணைக்கப்பட்டுள்ளது - Word, Excel, PDF,
Picture போன்ற - எந்த வகையை சார்ந்ததாக இருந்தாலும் அனைத்திற்கும் இந்த ஒரே CLIP
வடிவ ICON -தான்!
Mail -ஐ திறந்து பார்க்கும் போதுதான், இணைக்கப்பட்டுள்ள அந்த FILE -எந்த வகையை சார்ந்தது என்பது உறுதியாகும். ஆக, Mail -ஐ திறந்து பார்க்காமல் உள்ளே என்ன வகையை சார்ந்த FILE உள்ளது என்பதை அறிய முடியாது.
இருப்பினும், இதனை சற்று மாற்றி - அதாவது
இணைக்கப்பட்டுள்ள (Attachment) FILE, எந்த
வகையை சார்ந்த FILE -லில் இருந்து - கையாளப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளதோ .. அந்த வகை
FILE -இன் ICON -ஐ தெரிய வைத்தால் எப்படி இருக்கும்?
மாற்றம்
செய்தப்பிறகு:
G Mail - ஐ Chrome
Browser மூலம் செயல்படுத்தும்போது மட்டுமே
இது சாத்தியமாகிறது! காரணம், மாற்றத்தை செய்யப்போகிற- Add-on (நீட்சி), Chrome - ஐ
சேர்ந்தது (Chrome Add-on) என்பதால், Attachment ICON -ஐ மாற்ற Chrome Browser -ஐ உபயோகப்படுத்துதல்
அவசியம்.
எப்படி மாற்றம் செய்வது?
Chrome Browser -லிருந்து
.....
என்ற Link சென்று, +ADD TO
CHROME என்பதை Click செய்ததும் ....
ஒரு சிறிய Window திறக்கும். அதில் INSTALL என்பதை Click
செய்யவும்.
இங்கு சொல்லப்பட்டுள்ள Add-on மிகவும்
சிறியது என்பதால் Chrome Browser -ரில் தன்னை உடனே இணைத்துக்கொண்டு விடும். இப்போது Mail -களை
திறக்காமலேயே, ICON - களை பார்த்து, எந்த வகையை சார்ந்த File -கள் Attachment
-ஆக அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு - has:attachment என்று G Mail -இன் Search Box - இல் type செய்தால்,
அனைத்து
Attachment -மெயில்களையும் ஒரே window -வில்
காணலாம்.

No comments:
Post a Comment