முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 19, 2012

பொது அறிவுத் தகவல்கள்


கருவிகளும் பயன்களும்
1.     ஏரோமீட்டர் (Aerometer)-  காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.
2.     அம்மீட்டர் (Ammeter)-  மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.
3.     ஆடியோமீட்டர் (Audiometer)-  மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.
4.     போலோமீட்டர் (Bolometer)-  வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.
5.     கிரையோமீட்டர் (Cryometer)-  குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.
6.     எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)-  மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.
7.     மேனோமீட்டர் (Manometer)-  வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.
8.     டோனோமீட்டர் (Tonometer)- ஒலியின் அளவை அளவிடும் கருவி.
9.    வெர்னியர் (Vernier)-  சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.
10.  பைரோமீட்டர் (Pyrometer) -  அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.
11.   பாத்தோமீட்டர் (Fathometer)-  ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.
12.   டைனமோ (Dynamo)-  எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.
13.   வேவ்மீட்டர் (Wavemeter)-  ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
14.   பிளானிமீட்டர் (Planimeter)-  பரப்பை அளவிடும் கருவி.
15.    ரெக்டிஃபையர் (Rectifier)-  ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.
16.    டென்சிமீட்டர் (Tensimeter)-  ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.
எதைப்பற்றியது?
1. பேடாலஜி (Pedology)-  மண் அறிவியல் குறித்த படிப்பு.
2. பெட்ராலஜி (Petrology)-  பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.
3. சூஜியோகிராபி (Zoogerogrphy)-  பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.
4. சிஸ்மோலஜி (Seismology)-  பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.
5. ஹைட்ராலஜி (Hydrology)-  பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.
6.   கிளைமட்டாலஜி (Climatology)-  சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.
7. பயோ ஜியோகிராபி (Biogeography)-  பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.
எங்கேஅதிக உற்பத்தி?
1.   ஆப்பிள் -  இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர்.
2. வாழைப்பழம் -  குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம்.
3. இஞ்சி -  கேரளம், மேகாலயா.
4.   கோகோ -  கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு.
5. திராட்சை -  மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம்.
6. மாம்பழம் -  உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு.
7. ஆரஞ்சு -  மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, மேகலாயா.
8. மிளகு -  கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு
9. அன்னாசி பழம் -  அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், திரிபுரா.
10 .ஏலக்காய் - கர்நாடகம், சிக்கிம்,கேரளம், தமிழ்நாடு.
11. முந்திரி -  கேரளம், ஆந்திரம்.
எந்தத் தொழிற்சாலை எங்கே?
1.    ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் -  ருப்னாராய்பூர் (மேற்கு வங்கம்).
2.    ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் –  பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ.
3.    பாரத் அலுமினியம் நிறுவனம் -  சட்டீஸ்கர், மேற்கு வங்கம்.
4.    ஹிந்துஸ்தான் அலுமினியம் – ரேனுகோட் (உத்தரப் பிரதேசம்).
5.    இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் –   பெங்களூரு.
6.    எச்.எம்.டி. வாட்ச் –  பெங்களூரு.
7.    நேஷனல் நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர் மில்ஸ் –  நேபாநகர்.
8.    நேஷனல் பெர்ட்டிலைசர்  லிமிட்டெட் –  நங்கால், பட்டின்டா, பானிப்பட், விஜய்பூர்.
9.    ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் -  மகாராஷ்டிரம் மற்றும் கொச்சி.
10.    ஃபெர்ட்டிலைசர் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா -  சிந்திரி, கோரக்பூர், ராமகுண்டம்.
அணைகளும் மாநிலங்களும்
1.    நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் )  -
கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
2.  கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)-தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.
3.    கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)-கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித்  திட்டத்துக்கும்   இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.
4.    சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)-பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.
5.    சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)-ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.
6.     மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)-மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது
7.   பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)-சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது, விவசாயம், நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.
8.      தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் –
தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.

9.   சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் –
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது,  குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும்  நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.
10.     மேட்டூர் (தமிழ்நாடு)-காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது.


No comments:

Visitors