பருத்தித்துறை, இன்பருட்டிக் கடலில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் பெரிய
தீப்பிளம்பு ஒன்று தென்பட்டதுடன் கடும் புகையும் மேலெழுந்தது. இந்தக் காட்சியைக்
கண்ட அந்தப் பகுதி மக்கள் என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடியாதவர்களாக
சிறிதுநேரம் திகைத்துப் போனார்கள்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை, இன்பருட்டிக் கடற்கரையில் இருந்து கடலில் சுமார் 200 மீற்றர் தூரத்தில் திடீரென ஒரு தீப்பிளம்பு தோன்றி சுமார் அரை மணி நேரமாகத் தொடர்ந்து கடலில் எரிந்தவாறே காட்சி அளித்ததாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கடலில் எரிந்த தீப்பிளம்பு அணைந்த கையோடு கடற்றொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்தை நோக்கி விரைந்தனர். அப்போது சிலிண்டரின் பாகம் ஒன்று கடலினுள் மிதந்த வண்ணம் இருந்தது. அதனை மீட்டுக்கொண்டு அவர்கள் கரைக்கு வந்தனர்.
கடலுக்குள் மூழ்கியிருந்த சிலிண்டர் ஒன்றிலிருந்து வாயு கசிந்ததாலேயே இந்தத் தீப்பிளம்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மீனவர்கள் கருதுகின்றனர்.
கடற்படை கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் பாகம் ஒன்றே கடலில் மிதந்த வண்ணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment