முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 18, 2012

இலங்கையில் கிளிசறியா மரத்தில் இருந்து மின்சாரம்: சீன நிறுவனம் ஆய்வு


கிளிசறியா(சீமைக்கிழுவை) மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு, கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய தனது ஆய்வு அறிக்கையை இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம் சமர்ப்பித்துள்ளது.
சீனாவின் உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிசறிடியா மரத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், அத்துடன் மிகக்குறைந்தளவிலான முதலீட்டில் அதிக பயனைப் பெற முடியும் என்றும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீமைக்கிழுவை/கிழுவை மரத்தின் விஞ்ஞானப் பெயரே `கிளிசறியா` என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Visitors