கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடற்கரைப் பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால், 18 பேர் பலியானார்கள். கடந்த ஜூன் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவின் மேற்குக் கடற்கரையைத் தாக்கியது. இதனால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அடுத்த சில நாட்களிலேயே வங்கக் கடலில் உருவான மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக, ஆந்திர கடற்கரையைத் தாக்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். ஜூலை 23இல் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இந்திய கடற்கரையைத் தாக்கிய போதும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. செப்டம்பர் 23ம் தேதி வங்கக்கடலில் உருவாகி இந்தியாவின் கிழக்கு கடற்கரையைத் தாக்கிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 42 பேரை பலிகொண்டது. அக்டோபர் 20ம் தேதி வங்காளதேசம், மியான்மர் ஆகிய நாடுகளைத் தாக்கிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 215 பேர் பலியாயினர். அரபிக் கடலில் உருவாகி நவம்பர் 4ம் தேதி ஓமன், ஏமன் நாடுகளைத் தாக்கிய KEILA புயல் 14 மனித உயிர்களை காவு வாங்கியது. அடுத்த இரண்டே நாட்களில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை. அரபிக் கடலில் உருவாகி, கடந்த ஒன்றாம் தேதி இந்தியாவின் லட்சத் தீவுகள் மற்றும் இலங்கையைத் தாக்கிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 19 பேர் பலியாயினர். Thanks : puthiya thalaimurai news
No comments:
Post a Comment