புதுடெல்லி : பெட்ரோல் விலை நாளை மறுநாள் முதல் ரூ.2.25 உயர்கிறது. கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் கால கட்டத்தில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதன் காரணமாக 2 மாதங்கள் விலை உயர்த்தப்படவில்லை.
கச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் முதல் முறையாக பெட்ரோல் விலை 2 முறை குறைக்கப்பட்டது. அதன்பின்னர் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டன.
இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.25 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடப்பதால் விலை உயர்வு 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Thanks : Thinakaran news..
No comments:
Post a Comment