முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 9, 2011

கங்குலி, லாராவை யாரும் ஏலம் கேட்கவில்லை

பெங்களூர், ஜன.9-
 
ஐ.பி.எல். ஏலத்தில், ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஆகியோரை முதல் சுற்றில் யாரும் ஏலம் கேட்கவில்லை.
 
 இவர்களின் பெயர் வாசிக்கப்பட்ட போது, அனைத்து அணி உரிமையாளர்களும் மவுனம் சாதித்து விட்டனர். கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கங்குலியை மீண்டும் வைத்துக்கொள்ள விரும்பாமல் அந்த அணி அவரை விடுவித்தது.
 
இதையடுத்து ஏலத்தில் கங்குலியின் அடிப்படை விலையாக ரூ.1 கோடியே 84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரை யாரும் கேட்கவில்லை. இதே போல் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற லாராவின் மீது எந்த அணியின் முதலீடு செய்ய முன்வரவில்லை.
 
பெரும்பாலான அணிகள் இளம் வீரர்களை குறி வைத்தே ஏலம் கேட்டனர். அதே சமயம் வெஸ்ட் இண்டீசின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை யாரும் ஏலம் கேட்காதது ஆச்சரியம் அளித்தது. இந்தியாவில் ஐ.பி.எல். நடக்கும் சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுடன் விளையாட இருக்கிறது.
 
 எனவே அவர் அந்த போட்டியில் விளையாட வேண்டி வரும் என்பதால் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை. மார்க் பவுச்சர் (தென்ஆப்பிரிக்கா), கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா), மென்டிஸ் (இலங்கை), ஆண்டர்சன் (இங்கிலாந்து), லுக் ரைட் (இங்கிலாந்து), ஸ்வான் (இங்கிலாந்து), ரைடர் (நியூசிலாந்து) ஆகியோரும் விற்கப்படாத வீரர்கள் ஆவார். இவர்கள் அடுத்த சுற்றில் விலைபோக சிறிய வாய்ப்பே உள்ளது.

No comments:

Visitors