முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 3, 2011

ஸ்ரீசாந்த் அபார பந்துவீச்சு: தென்னாப்பிரிக்கா திணறல்

கேப்டவுன், ஜன.2: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் காலிஸ் சதமடித்தார். எனினும் இந்தியாவின் அபார பந்துவீச்சால் அந்த அணி ரன்களைக் குவிக்கத் தடுமாறி வருகிறது.


இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.


தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித், பீட்டர்சன் ஆகியோர் முதல் இன்னிங்ஸை துவக்கினர். ஜாகீர்கான் ஆரம்பம் முதலே பவுன்சர்களை வீசி தொடக்க வீரர்களை தடுமாறச் செய்தார். குறிப்பாக ஸ்மித் மிகவும் தடுமாறினார். இதை சரியாகப் பயன்படுத்திய ஜாகீர்கான் 7-வது ஓவரில் ஸ்மித்தை வெளியேற்றினார். இதையடுத்து ஆம்லா களம் புகுந்தார்.


மழை குறுக்கீடு: 9 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, ஸ்ரீசாந்துக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை பந்துவீச அழைத்தார் தோனி. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. பீட்டர்சனை 21 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா.


அடுத்து வந்த காலிஸ், ஆம்லாவுடன் சிறப்பாக விளையாடினார். ஆம்லா 59 ரன்களில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 74 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. காலிஸ் 81 ரன்களுடனும், பிரின்ஸ் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


இன்று ஆட்டத்தைத் துவக்கிய சிறிது நேரத்தில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் பிரின்ஸ் ஆட்டமிழந்தார். அதன் பிறகு மார்க் பவுச்சர், ஸ்டெய்ன் ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஆட வந்த மோர்கல் 8 ரன்களுக்கு ஸ்ரீசாந்த் வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் நிதானமாக ஆடிவரும் காலிஸ் சதம் அடித்து விக்கெட் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.


8 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி  293 ரன்களை எடுத்திருக்கிறது. ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டுகளையும் ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜாகீர்கான்

No comments:

Visitors