முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 5, 2010

திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை : தொடரும் மழையால் பாதிப்பு அதிகரிப்பு

 
imagesதிருவாரூர் : தொடர் மழை, வெள்ளத்தால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்பு அளவு அதிகரித்தது. மேலும், மழை நீடிக்கும் என்பதால் இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுக்கப்படுகிறது.
கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில், தஞ்சை மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் வயல்களிலும், நீர் வழிப்பாதைகளிலும் நீர் வடிந்துவிடுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை. இருந்தும், தஞ்சை அடுத்த கடகடப்பை, காடுகாவல், மேலசித்தார்காடு, குருங்கலூர், வெண்ணுக்குடி, உதாரமங்கலம் போன்ற கிராமங்களில் வயல்கள் மற்றும் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
வேளாண் துறையின் ஆய்வில் 28 ஆயிரத்து 804 ஹெக்டேர் பயிர்கள் நீரில் சூழ்ந்துள்ளதாக கணக்கெடுத்துள்ளனர். இதில், பெரும்பாலான வயல்களில் பயிர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இதில், 46 ஹெக்டேர் மட்டும் அழுகி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் கடும் மழையுடன், வயல்களும், வீடுகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 80 ஆயிரம் ஹெக்டேர் வரை பயிர்கள் பாதியளவும், அதற்கும் குறைவாகவும் நீரில் மூழ்கி காணப்படுகிறது. இன்னும் மழை தொடர்ந்தால் இவற்றில் பெரும்பாலான பகுதி அழுகி பாதிப்பை ஏற்படுத்தும்.
திருவாரூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, பொதுமக்கள், பொதுப்பணித்துறையினர் இணைந்து மணல் மூடைகளை வைத்தும், மாற்றுப்பாதையில் நீரை திருப்பியும் அடைத்துள்ளனர்.
பள்ளி மற்றும் சமுதாய கூடங்களில், 1,500 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் அந்த இடங்களுக்கு சென்று சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி தாலுகாவில் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்கள் பத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. நான்கு புறமும் மறைக்காக்கோரையாறு, வளவனாறு சூழ்ந்த ஓவரூர், வெள்ளங்கால் கிராம மக்கள் ஆடு, மாடுகளுடன் ஊரைவிட்டு வெளியேறினர்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீடாமங்கலம் 94.8 மி.மீட்டர், பாண்டவையாறு 84, திருவாரூர் 80.6, திருத்துறைப்பூண்டி 73.4, தஞ்சை 68.4, கோரையாறு 68.2, ஒரத்தநாடு 67, திருப்பூண்டி 64, கும்பகோணம் 50.4, சீர்காழி 50.2, கொள்ளிடம் 50, குடவாசல் 46.2, திருவையாறு 45, நன்னிலம் 44.3, ஈச்சன்விடுதி 42, வலங்கைமான் 40.4, திருக்காட்டுப்பள்ளி 40.2, மதுக்கூர் 40, நெய்வாசல் தென்பாதி 38.4.
தலைஞாயிறு 37.4, முள்ளியாறு 37, மணல்மேடு 34, மஞ்சளாறு 32.6, முத்துப்பேட்டை 32.2, மயிலாடுதுறை 32, மன்னார்குடி 32, பாபநாசம் 31, அணைக்கரை 31, கல்லணை 29.2, அய்யம்பேட்டை 28, வெட்டிக்காடு 27, பூதலூர் 25, பொறையாறு 23.7, நாகுடி 12, நாகை 19.9, பேராவூரணி 18, பட்டுக்கோட்டை 17, ஆயங்குடி 12.2, வேதாரண்யம் 9.2 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்றும் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது.
இந்த தொடர் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடுக்கப்படுவதாக கலெக்டர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

No comments:

Visitors