முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 18, 2010

ஹிந்து அமைப்புகள் லஷ்கரைவிட பயங்கரமானவை: ராகுல் காந்தி

புது தில்லி, டிச.17:  லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளை விட ஹிந்து அமைப்புகள் பயங்கரமானவை என காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத்தி ரோமருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்தை விட ஹிந்துத்துவாவை வலியுறுத்தும் மதவாத சங்கப்பரிவார அமைப்புகளால்தான் ஆபத்து அதிகம் என்று அவரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விருந்தில் திமோத்தி ரோமர் பேசும்போது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பது குறித்து ராகுலின் கருத்தை கேட்டார்.
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, அத்தகைய அமைப்புகளுக்கு முஸ்லிம்களில் ஒரு சிலரிடம் ஆதரவு இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதேசமயம் இந்தியாவில் இப்போது ஹிந்து பழமைவாத அமைப்புகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றன. இவர்கள் லஷ்கர்-இ தொய்பா அமைப்பினரைவிட மிகவும் பயங்கரமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதை அப்படியே குறிப்பிட்டு திமோத்தி ரோமர் எழுதிய அறிக்கையை "விக்கி லீக்ஸ்' வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே ஒருமுறை ஹிந்து அமைப்புகளை காவி பயங்கரவாதம் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். இப்போது வெளிநாட்டு தூதரிடமும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கர்கரேவுக்கு ஹிந்து அமைப்புகளிடமிருந்து கொலைமிரட்டல் வந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய்சிங் தொடர்ந்து கூறி வருகிறார். இதன் மூலம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை மதவாத கட்சி என்றும், பயங்கரவாத அமைப்பு என்ற தோற்றத்தை சித்தரிக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். சாடல்

ராகுல் காந்தி தெரிவித்த கருத்து மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். கருத்து தெரிவித்துள்ளது.
"காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே ஹிந்துக்களை தீவிரவாதிகள் என பிரபலப்படுத்துவதில் ஒரு போட்டியே நிகழ்வதாகத் தெரிகிறது. ஜிஹாதி முஸ்லிம் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் அதேவேளையில் ஹிந்துக்களை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் முயற்சியை காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ் கூறினார்.

பா.ஜ.க. தாக்கு

பொறுப்பற்றவிதத்தில் இத்தகைய கருத்துகளை ராகுல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.
இணையதளத்தில் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. இதை அமெரிக்க அரசு மறுக்கவுமில்லை, உறுதி செய்யவும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கையை பாதிக்கும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் விளக்கம்

அனைத்து வகையான பயங்கரவாதமும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகத்தான் ராகுல் தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஜனார்தன் துவிவேதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை குறிவைத்து பா.ஜ.க. பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு சொட்டு ரத்தத்தைக்கூட பாஜக சிந்தியதில்லை.
ஆனால் ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் பயங்கரவாதத்துக்கு பலியானவர்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி குறிப்பிட்டார்.

No comments:

Visitors