முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 18, 2010

வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா (366/2)


சத​ம​டித்​த​தும் மட்​டையை உயர்த்தி ரசி​கர்​க​ளின் பாராட்டை ஏற்​கி​றார் காலிஸ்

செஞ்சுரியன், டிச.17: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க வீரர்கள் காலிஸ் 102 ரன்களுடனும், ஆம்லா 116 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை தனது முதல் இன்னிங்ûஸத் தொடர்ந்தது இந்திய அணி. மோர்கல் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் கேப்டன் தோனி ஆட்டமிழந்தார். இதையடுத்து இரண்டாவது நாளில் ரன் கணக்கைத் தொடங்காமலேயே இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
வலுவான தொடக்கம்:

பின்னர் தனது முதல் இன்னிங்ûஸத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஸ்மித், பீட்டர்சன் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 111 ரன்களை எட்டியபோது ஸ்மித் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பீட்டர்சனுடன் ஆம்லா ஜோடி சேர்ந்தார்.

பீட்டர்சன் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் காலிஸ் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி 78 பந்துகளில் அரைசதமடித்தார் ஆம்லா. அவரைத் தொடர்ந்து காலிஸýம் 73 பந்துகளில் அரைசதமடித்தார்.

இதனால் அணியின் ஸ்கோர் 60 ஓவர்களில் 250 ரன்களைக் கடந்தது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய காலிஸ் 130 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் சதமடித்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆம்லாவும் 165 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. காலிஸ் 102 ரன்களுடனும், ஆம்லா 116 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஸ்கோர் போர்டு

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) 136
தென்னாப்பிரிக்கா
ஸ்மித் (சி) டோனி (பி) ஹர்பஜன் 62
பீட்டர்சன் (சி) கம்பீர் (பி) ஹர்பஜன் 77
ஆம்லா அவுட் இல்லை 116
காலிஸ் அவுட் இல்லை 102
உபரி    9
மொத்தம் (87 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 366

விக்கெட் வீழ்ச்சி

1-111 (ஸ்மித்), 2-166 (பீட்டர்சன்)

பௌலிங்

ஸ்ரீசாந்த் 19-1-71-0
இஷாந்த் சர்மா 18-2-68-0
உனட்கட் 16-2-60-0
ஹர்பஜன் சிங் 25-2-107-2
ரெய்னா 3-0-27-0
டெண்டுல்கர் 6-1-29-0

No comments:

Visitors