புதுடெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தும் முயற்சியாக பா.ஜ. தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் மக்களவை சபாநாயகர் மீரா குமார் இன்று பேச்சு நடத்துகிறார். 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று பா.ஜ. உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கூட்டுக் குழு அமைக்கக் கோரி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கின.
கூட்டுக் குழுவின் அவசியம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தலாம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த யோசனையையும் பா.ஜ. நிராகரித்தது. பொது கணக்கு குழு முன் ஆஜராகத் தயார் என்று அக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு, பிரதமர் மன்மோகன் எழுதிய கடிதத்தையும் எதிர்க்கட்சிகள் பொருட்படுத்தவில்லை.
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் முடக்குவோம் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தும் முயற்சியாக அரசு மற்றும் பா.ஜ. தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் மீரா குமார் இன்று பேச்சு நடத்துகிறார். இதற்காக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பி.கே.பன்சால், பா.ஜ. மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரை மீரா குமார் இன்று மதிய விருந்துக்கு அழைத்துள்ளார். கம்யூனிஸ்ட் உட்பட மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் மீரா குமார் நாளை பேச்சு நடத்துகிறார்.

No comments:
Post a Comment