டர்பன், டிச.30-
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் கொண்ட தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் கொண்ட தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதை தொடர்ந்து இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2- வது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த 26- ந்தேதி தொடங்கியது. பந்து வீச்சாளர்களின் விக்கெட் கூடாரமாக திகழ்ந்த இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 205 ரன்களிலும், தென்ஆப்பிரிக்கா 131 ரன்களிலும் சுருண்டது.
இதன் பின்னர் 74 ரன்கள் முன்னிலையுடன் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா லட்சுமணின் (96 ரன்) அபாரமான ஆட்டத்தின் உதவியுடன் 228 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து தென்ஆப்பிரிக்காவுக்கு 303 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இலக்கை நோக்கி 2- வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 3- வது நாள் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. ஜேக் காலிஸ் 12 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்த 4- வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. நெருக்கடிக்கு மத்தியில் தென்ஆப்பிரிக்க அணி 2- வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஹர்பஜன்சிங்கும், ஸ்ரீசாந்த்தும் தாக்குதலை தொடங்கினார்கள். ஆடுகளம் தொடர்ந்து பவுலர்களுக்கு கைகொடுத்ததால், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.
அபாயகரமான பேட்ஸ்மேன் காலிசை (17 ரன்) சிறிது நேரத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் வெளியேற்றினார். அவர் திடீரென வீசிய ஆக்ரோஷமான பவுன்சருக்கு நிலைகுலைந்து போன காலிஸ், முகத்தை சாய்த்து கொண்டு துள்ளியபடி அதனை தவிர்க்க முயற்சித்தார். ஆனால் பந்து தானாகவே அவரது கையுறையில் பட்டு, கல்லி திசையில் நின்ற ஷேவாக்கிடம் சுலப கேட்ச்சாக போய் விழுந்தது.
இதன் பிறகு இந்திய வீரர்கள் உற்சாகமானார்கள். டிவில்லியர்ஸ் (33 ரன்), பவுச்சர்(1 ரன்) அடுத்தடுத்து எல்.பி.டபிள்ï. ஆக ஆட்டம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது. இருப்பினும் டிவில்லியர்ஸ், பவுச்சர் இருவருக்கும் வழங்கப்பட்டது துல்லியமான எல்.பி.டபிள்ï. அல்ல, டி.வி. ரீப்ளேயில், பந்து அவர்களின் ஸ்டம்பை தாக்காமல் விலகிச் செல்வது தெரியவந்தது. நடுவர்களின் தவறான தீர்ப்பால் அவர்கள் அதிருப்தியுடனேயே பெவிலியன் திரும்பினர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் பிரின்ஸ் போராடினார். ஆனால் அவருக்கு துணையாக எந்த வீரரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காததால், அவரால் தென்ஆப்பிரிக்க அணியை கரைசேர்க்க இயலவில்லை.
முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2- வது இன்னிங்சில் 215 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரின்ஸ் 39 ரன்களுடன் (108 பந்து, 3 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் தலா 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இரு இன்னிங்சிலும் இந்திய தரப்பில் அதிக ரன்கள் எடுத்தவரான லட்சுமண் (38 மற்றும் 96 ரன்கள்) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு வருகிற 2- ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

No comments:
Post a Comment