முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 26, 2010

2வது டெஸ்ட் இன்று தொடக்கம் பதிலடி கொடுக்குமா இந்தியா

டர்பன்: இந்தியா & தென் ஆப்ரிக்கா மோதும் 2வது டெஸ்ட் போட்டி, டர்பனில் இன்று தொடங்குகிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதும் இந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன் வித்தியாசத்தில் வென்ற தென்ஆப்ரிக்கா 1&0 என்று முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், 2வது டெஸ்ட் டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் இன்று (டிச.26&30) தொடங்குகிறது. முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இருந்தும், சச்சின் 50வது சதத்தை பதிவு செய்தது தோல்வியிலும் ஒரு மகிழ்ச்சியை தந்தது.
ஜாகீர் ரெடி: காயம் காரணமாக முதல் டெஸ்டில் களம் இறங்காத வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் இன்றைய போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார். ஜெய்தேவ் உனத்காட்டுக்கு பதிலாக அவர் களமிறங்குகிறார். மோசமான பார்மில் உள்ள ரெய்னா நீக்கப்பட்டு புஜாராவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.
 இந்திய அணியின் பலம் பேட்டிங் என்பதால் சேவக்கின் அதிரடி, அனுபவ வீரர்கள் சச்சின், டிராவிட், லஷ்மண் ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் எடுபட்டால் மட்டுமே தென்ஆப்ரிக்காவை சமாளிக்க முடியும்.
டர்பன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருக்கும். அதோடு, இந்த மைதானம் தென்ஆப்ரிக்காவுக்கு அவ்வளவு சாதகமாக இருந்ததில்லை. இதைப் பயன்படுத்தி இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி நெருக்கடி கொடுக்க வேண்டும்.
தென் ஆப்ரிக்கா தரப்பில் கேப்டன் ஸ்மித், அம்லா, காலிஸ், டி வில்லியர்ஸ், பவுச்சர் என்று மிரட்டலான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இளம் வீரர் டுமினி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்டெயின் மற்றும் மார்கெல் இருவரும் அபாரமாக பந்து வீசி வருகின்றனர். சொந்த மண்ணில் விளையாடுவது இவர்களுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியா இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதுடன், அங்கு விளையாடியுள்ள 13 போட்டிகளில் 1 வெற்றி, 7 தோல்வி, 5 டிரா கண்டுள்ளது. நம்பர் 1 அணி என்ற கவுரவத்தை காப்பாற்றும் வகையில், டர்பன் டெஸ்டில் இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
போட்டி தொடக்கம்: பிற்பகல் 2 மணி
நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட்

No comments:

Visitors