அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகசியமாக ஆப்கானிஸ்தான் வந்து சென்றார். அப்போது அவர் அமெரிக்க வீரர்கள் மத்தியில் உரை நிகழ்ந்தினார். இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த குண்டை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். இதில் பொது மக்கள் 15 பேர் பலியானார்கள்.
அதே போன்று கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் கந்தகாரில் போலீஸ் வாகனங்கள் மீது கார்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 9 போலீசார் காயம் அடைந்தனர்.
இது போன்றுதொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதால் அங்குள்ள மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
No comments:
Post a Comment