தற்போது முத்துப்பேட்டையில் HP முகவரான மரியா கேஸ் நிறுவனம் நமது வாடிக்கையாளர்களுக்கு மானிய விலை தரக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் புத்தகம் மற்றும் அதற்குரிய ஆவணங்களை சரிபார்ப்பதற்காக சிறப்பு முகாமினை நடத்தி வருகிறது. இந்த முகாம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்ததால் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து சிறிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. தெற்குதெரு, அரபு சாகிப் பள்ளி வாசல் தெரு மற்றும் தொலை தூர தெருப்பகுதிகளிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு பொது மக்கள் குறிப்பாக பெண்கள் செல்வதற்கு சிரமப்பட்டார்கள்.
இதனை கருத்தில் கொண்டு, முத்துப்பேட்டை கிளை தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொரு பள்ளிவாசல் முஹல்லாலிலும் சிறப்பு முகாமினை நடத்த வேண்டும் என்று கேஸ் ஏஜென்ஸியின் அலுவலர்களை தொடர்புக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை விளக்கினார்கள். அதன் படி, சில குறிப்பிட்ட பள்ளி வாசல் வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 11.10.12 முஹைதீன் பள்ளி மதரஸா வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கேஸ் ஏஜென்ஸியின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமுமுக நிர்வாகிகள் – முத்துப்பேட்டை – நகர பொருளாளர் – சாதிக், நகர துணை செயலாளர் – சித்திக் அஹமது, தமுமுக நிர்வாகிகளான பாக்கர் அலி, நஷீர் அஹமது, நவாப்கான், தாவூத்ஷா, கே. முஹம்மது யாசின் (மனித நேய மக்கள் கட்சி), வக்கீல் – தீன் முஹம்மது – (மாவட்ட வழக்கறிஞர்) மற்றும் யூனுஸ் – மாஸ் கம்யூனிகேஷன் போன்ற சகோதரர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து மரியா கேஸ்
ஏஜென்ஸியை சார்ந்த அருள்ராஜ், சத்யா, அரவிந்த போன்றவர்களுக்கு உறுதுணையாக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
ஏஜென்ஸியை சார்ந்த அருள்ராஜ், சத்யா, அரவிந்த போன்றவர்களுக்கு உறுதுணையாக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
குறிப்பு : 12.10.12 அரபு சாகிப் பள்ளி வாசலிலும், 13.10.12 புதுப்பள்ளி வாசலிலும் சிறப்பு முகாம் நடைபெறும்




No comments:
Post a Comment