முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 8, 2010

டெல்லி, பெங்களூரில் தாங்க முடியாத குளிர்

புதுடெல்லி, டிச.8-
 
பெங்களூர் நகரில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. பகலில் நாள் முழுவதும் மேக கூட்டமாகவே காணப்படுகிறது. வெயிலை பார்ப்பது அறிதாகிவிட்டது. கடுங்குளிரால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
 
கர்நாடகாவில் பல பகுதிகளில் இதே நிலை நீடிக்கிறது. சித்ரதுர்காவில் 13.4, கதக்கில் 15.3 டிகிரி செல்சியஸ் என்று வெப்ப நிலை குறைந்துள்ளது. பொதுவாக டிசம்பரில் 16 டிகிரி செல்சியஸ் இருக்கும். இந்த ஆண்டு இதைவிட குறைவாக உள்ளது.
 
டெல்லியிலும் தற்போது மிகவும் குளிர் அதிகமாக உள்ளது. நேற்று 23.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியா ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
 
பனி மூட்டம் காரணமாக விமானங்கள் தரை இறங்குவதிலும் தாமம் ஏற்பட்டது.
 
News uptate : மாலைமலர்

No comments:

Visitors