புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நேற்று 87வது பிறந்தநாள். இதையொட்டி, டெல்லியில் அவரது வீட்டுக்கு பா.ஜ, மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், ஜஸ்வந்த் சிங் உட்பட பலரும் சென்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நிருபர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது: நாட்டுக்கு வாஜ்பாய் ஆற்றியுள்ள சேவைகளை பாராட்டும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு வாஜ்பாய் ஆற்றியுள்ள பணிகளை யாராலும் மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது. அதனால், அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும். அரசியலில் பண்பு, நேர்மை ஆகியவை குறைந்து வரும் நிலையில், கடந்த 55 ஆண்டாக இந்த பண்பை கட்டி காத்து வருபவர் வாஜ்பாய். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
No comments:
Post a Comment