மும்பை: மும்பையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த 4 லஸ்கர் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர்’என்று மும்பை இணை போலீஸ் கமிஷனர் ஹிமான்சு ராய் கூறினார். மும்பையில் தற்கொலை தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் லஷ்கர் இயக்கத்தை சேர்ந்த 12 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக புலனாய்வு ஏஜென்சிகள் எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து மும்பையில் உச்சபட்ச உஷார்நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சு ராய் நேற்று கூறியதாவது: மும்பையில் விழா காலத்தில் தீவிரவாத தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தானின் லஷ்கர்&இ&தய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 12 தீவிரவாதிகள் மும்பைக்குள் ஏற்கனவே ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எசரித்துள்ளது.
நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக மும்பைக்குள் லஷ்கர் தீவிரவாதிகளை கொண்ட ஒரு குழு ஏற்கனவே நுழைந்து விட்டது. இந்த தீவிரவாதிகள் ரகசிய இடங்களில் பதுங்கியுள்ளனர். இந்த குழுவை சேர்ந்தவர்களில் 4 பேர் குஜராத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு சென்றனர். மற்ற 4 பேர் மும்பையில் பதுங்கியுள்ளனர்.
இவர்கள் அப்துல் கரீம் மூசா, வாலித் ஜின்னா, நூர் அபு அலி மற்றும் மஹ்பூஸ் ஆலம் என்று அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த தீவிரவாதிகளில் வாலித் ஜின்னா என்பவனின் படம் கிடைத்துள்ளது. மும்பையில் உள்ள வெளிநாட்டு தூதரக அலுவலகங்கள் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டின் தூதரகங்களில் தற்கொலை படை பாணியில் தீவிரவாத தாக்குதலை இந்த தீவிரவாதிகள் நடத்தக்கூடும்.
வாகனங்களில் குண்டுகளை நிரப்பியும் இந்த தாக்குதல் நடத்தப்படலாம். மும்பை போலீஸ் தலைமையகமும் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்துக்கு உரிய நபர்கள் யாரையாவது பொதுமக்கள் கண்டால் 022-22633333 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு ஹிமான்சு ராய் கூறினார்.

No comments:
Post a Comment