சியோல், டிச. 16: வடகொரியா சமீபத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இயான்பினாங் தீவில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடத்த தென்கொரிய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
தென்கொரியாவுக்குச் சொந்தமான இத் தீவு, வடகொரியாவுக்கு மிக அருகில் உள்ளது. இந்தத் தீவின் மீது கடந்த நவம்பர் 23-ம் தேதி வடகொரிய ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியன் மூலம்தான் இருநாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டது.வடகொரியாவின் தாக்குதலால் இருவர் உயிரிழந்தனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.இப்போது பதற்றம் சிறிது தணிந்துள்ள நிலையில் இயான்பினாங் தீவில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிற்சி டிசம்பர் 18 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment