முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 7, 2010

விமான கட்டணம் ஒரு வாரத்தில் சீராக்கப்படும்: மத்திய மந்திரி தகவல்

மத்திய விமானப் போக்குவரத்து மந்திரி பிரபுல் பட்டேல் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், விமான கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம் என்று நேரில் விளக்கம் அளிக்கும்படி விமான நிறுவனங்களுக்கு, விமான போக்குவரத்து இயக்குனர் அலுவலகம் அழைப்பு விடுத்து உள்ளது.
அதன்படி இன்று ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்களின் உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
திங்கட்கிழமை முழு அளவில் விமான சேவை அளித்து வரும் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இன்னும் ஒரு வாரத்தில் விமான போக்குவரத்து நிறுவனங்கள், விமான கட்டணம் குறித்து சரியான முடிவு எடுத்து, கட்டணத்தை சீரமைக்கும் என்று கூறினார்.

No comments:

Visitors