முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 11, 2010

புகை பிடிப்பதை நிறுத்த ஒபாமா தீவிர முயற்சி

வாஷிங்டன்: புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் முயற்சி மேற்கொண்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘கடந்த 9 மாதங்களில் அதிபர் ஒபாமா புகை பிடித்ததாக ஒருமுறைகூட நான் பார்க்கவில்லை. அவர் சிகரெட் பிடித்ததை பார்த்ததாக யாரும் கூறியும் கேள்விப்படவில்லை. புகை பழக்கத்தை கைவிட ஒபாமா தீவிர முயற்சி செய்வதாக கருதுகிறேன்.
அதற்காக அவர் பெருமைப்படலாம். அத்துடன் உடல் நலனுக்கு புகை பழக்கம் நல்லதல்ல என்பது ஒபாமாவுக்கு தெரியும். தந்தை புகை பிடிப்பது பற்றி குழந்தைகள் அறிந்து கொள்வதை அதிபர் விரும்பவில்லை என நம்புகிறேன். அது தனக்கும் பொருந்தும் என அவர் நினைத்திருக்கலாம். புகை பிடிப்பதன் தீமைகளை புரிந்து கொண்டதுடன், பல ஆண்டு பழக்கத்தை நிறுத்த அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் எனத் தெரிகிறது’’ என்றார்.

No comments:

Visitors