முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Feb 11, 2012

எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​...


ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டை Emirates Identity Card, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவசியம் எடுத்தாக வேண்டும்.


இதில் சமீபத்தில் ஒரு குழப்பமான சூழல் துபாய் மற்றும் அபுதாபியில் இருக்கும் Free Zone கம்பெனிகளில் வேலை செய்யும் அனைவருக்கும் ஏற்பட்டது. அதாவது, அபுதாபி 31-மார்ச்-2012, துபாய் 31-மே-2012 என்று கடைசி தேதி இருக்கும் பட்சத்தில் 31-ஜனவரி-2012லிருந்து அபராதம் விதிக்க தொடங்கியிருந்தனர், இதில் சிலர் அதனைச் செலுத்தி புதுப்பிக்கவும், புதிதாக செய்தும் கொண்டனர்.


இப்படி இருக்க, நேற்று செவ்வாய் கிழமை emirates id authority வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அபுதாபி மற்றும் துபாய் Free Zone கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது, அறிவிக்கப்பட்ட தேதிவரை எவ்வித அபராதங்கள் இல்லை, குறிப்பிட்ட தேதிக்குள் அவர்கள் புதிய ஐ.டி.கார்டினை முறையாக பெற்றே ஆக வேண்டும்.


மற்ற அமீரகங்களான, சார்ஜா, அஜ்மான், ராசல்கைமா, ஃபுஜைரா, உம்முல்குவய்ன் இங்கே வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு ஏற்கனவே கெடு தேதி முடிந்து விட்டதால் அபராதம் தொடர்கிறது.

No comments:

Visitors