புதுதில்லி, டிச.13: இந்தியத் தூதர் மீரா சங்கரை உடல் முழுவதும் கைகளால் சோதனையிட்ட சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து ஹூஸ்டன் விமானநிலையத்தில் மேலும் ஒரு இந்தியத் தூதருக்கும் அதேபோன்ற அவமரியாதை நிகழ்ந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவிடம் இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் புரியை ஹூஸ்டன் விமானநிலையத்தில் 2 வாரங்களுக்கு முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது தலைப்பாகையை அகற்றுமாறு விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தலைப்பாகையை அகற்ற புரி மறுக்கவே, அரை மணி நேரத்துக்கும் மேலாக ஓர் அறையில் அவரை அமர வைத்துள்ளனர்.
இதற்கு ஹூஸ்டனில் உள்ள தூதரகம் மூலம் இந்தியா தனது ஆட்சேபத்தை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 4-ம் தேதியன்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மீரா சங்கரிடம் மிசிசிபியில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அவமரியாதை செய்தனர். இதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவும் அந்த சம்பவத்துக்கு பின்னர் வருத்தம் தெரிவித்தது.
No comments:
Post a Comment