Dec 27, 2010
சுனாமி நினைவு நாளில் மற்றொரு சோக சம்பவம்
கீழக்கரை: சுனாமி சோக சம்பவத்தின் 6வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமியில் பலியாகினர். அதே தினத்தில் நேற்று ராமநாதபுரம் கடல் 13 உயிர்களை பலி வாங்கியுள்ளது. இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பெரியபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று விட்டனர். விபத்துக்குள்ளான படகை செலுத்திய அயூப்கான் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு படகை செலுத்திய ரசூல் தப்பியோடி விட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment